Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்

ADDED : ஜூலை 22, 2024 06:59 AM


Google News
சேலம் சேலம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், நாளை, 6 இடங்களில் நடக்க உள்ளது. அதன்படி அயோத்தியாப்-பட்டணம் ஒன்றியத்தில் டி.பெருமாபாளையம், தாசநாயக்கன்-பட்டி, கோராத்துப்பட்டி, பள்ளிப்பட்டி, தைலானுார், சின்-னனுார், வளையக்காரனுார் ஆகிய பகுதி மக்களுக்கு, டி.பெருமா-பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடக்க உள்ளது.

அதேபோல் மேச்சேரி ஒன்றியத்தில் ஓலைப்பட்டி, அரங்கனுார், எம்.என்.பட்டி மக்களுக்கு, ஓலைப்பட்டி ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை கூடம்; காடையாம்பட்டி ஒன்றியத்தில் நடுப்பட்டி, குண்டுக்கல், தீவட்டிப்பட்டி மக்களுக்கு தீவட்டிப்-பட்டி கங்கா காவேரி மேல்நிலைப்பள்ளி; தலைவாசல் ஒன்றி-யத்தில் பெரியேரி, சித்தேரி, ஆறகளூர், கோவிந்தம்பாளையம், தியாகனுார் மக்களுக்கு, ஆறகளூர் என்.என்.எஸ்., திருமண மண்-டபத்தில் முகாம் நடக்க உள்ளது.

கொங்கணாபுரம் ஒன்றியத்தில் கச்சுப்பள்ளி, எருமைப்பட்டி மக்க-ளுக்கு கச்சுப்பள்ளி ஊராட்சி அலுவலகம்; தாரமங்கலம் ஒன்றி-யத்தில் செலவடை, ராமிரெட்டிபட்டி, அரியாம்பட்டி மக்க-ளுக்கு, செலவடை ஊராட்சி அலுவலகத்தில் முகாம் நடக்க உள்-ளதால் மக்கள் பயன்படுத்திக்கொள்ள, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us