/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தினமும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல் கொண்டலாம்பட்டி பைபாஸில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தல் தினமும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல் கொண்டலாம்பட்டி பைபாஸில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தல்
தினமும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல் கொண்டலாம்பட்டி பைபாஸில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தல்
தினமும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல் கொண்டலாம்பட்டி பைபாஸில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தல்
தினமும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல் கொண்டலாம்பட்டி பைபாஸில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 07:44 AM
சேலம்: கொண்டலாம்பட்டி பைபாஸில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்-டிகள் அவதிப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் மேம்பாலம் கட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்-ளனர்.
சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ரவுண்டானா, பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சங்ககிரி மாநில நெடுஞ்சாலை இணையும் பகுதியாக உள்ளது. அந்த பைபாஸ் வழியே சேலத்தில் இருந்து பெங்களூரு, கோவை, மதுரை செல்லும் வாக-னங்கள் பயணிக்கின்றன.
சேலம் டவுன் பகுதியான குகை, பிரபாத், அன்-னதானப்பட்டி, நெத்திமேட்டில் இருந்தும், கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, அரி-யானுார், வீரபாண்டி பகுதிகளுக்கு, தினமும் ஏராளமானோர் செல்கின்றனர். இந்த பைபாஸ் வழியே மட்டும் தினமும், 50,000க்கும் மேற்பட்ட லாரிகள், பஸ்கள், கார்கள், இருசக்கர வாக-னங்கள் கடந்து செல்கின்றன. இதனால் பண்-டிகை காலங்கள் மட்டுமின்றி, 'பீக்ஹவர்' எனும் காலை, மாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவே மாறிவிடுகி-றது.
ஈரோடு, கோவை, நாமக்கல், மதுரை செல்லும் பஸ்கள், பைபாஸ் இருபுறமும் பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன. இதனால் இரவில், மற்ற வாகனங்கள் செல்லவும் இடையூறு ஏற்-படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் தண்-ணீரும் தேங்குவதால் ஊர்ந்தபடி வாகனங்கள் அணிவகுக்க தொடங்கி விடுகின்றன. நெரிச-லின்போது வாகன ஓட்டிகள் முந்த முயன்று விபத்திலும் சிக்குகின்றனர். இதில் கை, கால்-களை இழந்தவர்கள் மட்டுமின்றி, சிலர் இறந்தும் உள்ளனர். இதற்கு தீர்வு காண, கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் மேம்-பாலம் கட்ட, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகா-ரிகள் கூறுகையில், 'ஆய்வு செய்து மேம்பாலம் கட்ட தேவை இருப்பின் நடவடிக்கை எடுக்கப்-படும்' என்றனர்.இந்த ரவுண்டானா, காசி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மையத்தில் உள்ளது. வடமாநிலங்கள், தமிழகம், கேரள மாநிலத்தோடு இணைக்க கூடியது. இதனால் ஆயிரக்கணக்-கான வாகனங்கள், தினமும் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவை கடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் எதிரொலியாகவே, காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்கள் கூட, ரவுண்டானாவை கடக்க, 30 நிமிடம் தேவைப்படுகிறது. போக்குவ-ரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசாரும் சிரமப்படுகின்றனர். இதற்கு மேம்பாலம் தான் தீர்வு.- ஆர்.சரவணன், 45,ஐஸ்கிரீம் வியாபாரி, கொண்டலாம்பட்டி.தினமும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவே கொண்டலாம்பட்டி பைபாஸ் உள்ளது. இந்த வழியே பெங்களூரு, சென்னை, விழுப்புரம் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. அதிகளவில் கார்-களும் கடப்பதால் விபத்து அபாயம் நிலவுகி-றது. நெடுஞ்சாலையில் நெரிசல் ஏற்படுவதால், மாநகரில் இருந்து மற்ற வாகன ஓட்டிகள் வெளியே செல்வதற்கு தாமதம் ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்த, மேம்பாலம் அமைத்தால் லாரி டிரைவர்களுக்கு பயனாக இருக்கும்.
- தனராஜ்,
தலைவர், தமிழக லாரி உரிமையாளர்சங்க கூட்டமைப்பு.கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. அப்பகுதியில் மாநகர் வழி-யாகவே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் அப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. மேம்பாலம் கட்-டினால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு. அதேநேரம் பாலம் கட்டிய பின் கனரக வாகனங்கள், மேம்-பாலத்தில் மட்டும் செல்லும்படி போக்குவ-ரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். சீலநாயக்-கன்பட்டி போன்று பாலத்தை பயன்படுத்தாமல் பஸ், கார்கள் செல்கின்றன. அதேபோல் இங்கும் இல்லாமல் சரியானபடி பாலம் கட்ட வேண்டும். இதனால் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்பெறும்.- அ.மோகன், 60,ஆட்டோ டிரைவர், கொண்டலாம்பட்டி.