/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 56 ரேஷன் கடைகள் கட்டுமானப்பணி தீவிரம் 56 ரேஷன் கடைகள் கட்டுமானப்பணி தீவிரம்
56 ரேஷன் கடைகள் கட்டுமானப்பணி தீவிரம்
56 ரேஷன் கடைகள் கட்டுமானப்பணி தீவிரம்
56 ரேஷன் கடைகள் கட்டுமானப்பணி தீவிரம்
ADDED : ஜூலை 08, 2024 04:58 AM
சேலம் : சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
மாவட்டத்தில் கடந்த, 3 ஆண்டு களில், 106 முழு நேரம், 36 பகுதி நேரம் என, 142 ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டு செயல்படுகின்றன. இதன்மூலம், 70,447 கார்டுகள் வாயிலாக, 2,39,884 குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறுகின்றனர். மொத்தம், 1,262 முழு நேரம், 470 பகுதி நேரம் என, 1,732 ரேஷன் கடை-களில், 10,99,898 ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்-கரை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள், மாதம், 21,200 டன் அளவில் வினியோகிக்கப்படுகின்றன. பொது வினியோக திட்ட சேவை, மக்களுக்கு முழுவீச்சில் சென்றடைய புது கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில், 81,652 மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்தில், 480 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் உள்ளன. அரசின் பல்-வேறு திட்டத்தில் புது ரேஷன் கடைகள் கட்ட மூன்றாண்டில், 13.10 கோடி ரூபாய் மதிப்பில், 103 கட்டடங்களுக்கு நிர்வாக அனுமதி அளித்து, 47 கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்-டன. 56 கடைகளுக்கு கட்டுமானப்பணிகள் நடக்கின்றன. மேலும், 470 கடைகளுக்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறப்பட்டுள்-ளது.