/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மலைப்பாதையில் தடுப்புச்சுவரை சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை மலைப்பாதையில் தடுப்புச்சுவரை சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை
மலைப்பாதையில் தடுப்புச்சுவரை சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை
மலைப்பாதையில் தடுப்புச்சுவரை சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை
மலைப்பாதையில் தடுப்புச்சுவரை சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை
ADDED : மே 29, 2025 01:49 AM
ஏற்காடு, ஏற்காடு மலைப்பாதை, 9வது கொண்டை ஊசி வளைவில் நேற்று முன்தினம் மாலை, சாலை ஓரம் இருந்த தடுப்புச்சுவர் சரிந்து, சாலை அந்தரத்தில் தொங்கியது. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர், அச்சாலையில் செல்லும் வாகனங்கள், சாலையோரம் சென்றுவிடாதபடி, தடுப்புகள் ஏற்படுத்தினர்.
நேற்று காலை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், கோட்ட பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர், துறை சார்ந்த அலுவலர்களுடன், தடுப்புச்சுவர் சரிந்த இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த இடத்தில் உடனே எம்.சாண்ட் மூட்டைகளை அடுக்கி, சாலையை சீரமைக்க உத்தரவிட்டனர். அதன்படி சீரமைப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணி இன்று முடியும் என, பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஆபத்தான இடங்கள்
கடந்த டிசம்பரில், மலைப்பாதை, 2வது கொண்டை ஊசி வளைவு அருகே ஒரு இடத்திலும், 60 அடி பாலம் அருகே ஒரு இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர், தற்காலிக நடவடிக்கையாக, எம்.சாண்ட் மூட்டைகளை அடுக்கினர். தற்போது வரை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லை. இதனால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகள் கிழிந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்தால், எம்.சாண்ட் கரைந்து பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் தடுப்புச்சுவர் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ஏற்காடு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சிவசெல்வியிடம் கேட்டபோது, ''அந்த இடங்களில் நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கு முன்னேற்பாடு நடந்து, அதற்கான ஏல பணி நடக்கிறது. வரும் ஜூலையில் பணி தொடங்க வாய்ப்புள்ளது,'' என்றார்.