வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது
வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது
வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது
ADDED : மார் 26, 2025 02:02 AM
வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது
ஆட்டையாம்பட்டி:ஆட்டையாம்பட்டி அருகே, திருமலை வீதியில் வசித்து வருபவர் காய்கறி வியாபாரி ரஞ்சித்குமார், 27. இவர் நேற்று காலை, 6:00 மணிக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் காகாபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கண்டர்குலமாணிக்கம் அருகே, வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி, 4,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பினார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்து, மணிகண்டன், 31, என்பவரை கைது செய்தனர்.