ADDED : மார் 20, 2025 01:19 AM
கிணற்றில் முதியவர் சடலம் மீட்பு
காரிப்பட்டி:காரிப்பட்டி, அ.நா.மங்கலத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம், 70. நேற்று முன்தினம் மாலை மாயமானார். நேற்று காலை, 11:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில், அவரது சடலம் மிதந்தது. மக்கள் மீட்டு காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்ததில், சமீபகாலமாக அவருக்கு வயிற்று வலி இருந்தது தெரிந்தது. இதில் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்தாரா என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.