/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுகாதார நிலையத்தில்சோலார் பதிக்க அறிவுரைசுகாதார நிலையத்தில்சோலார் பதிக்க அறிவுரை
சுகாதார நிலையத்தில்சோலார் பதிக்க அறிவுரை
சுகாதார நிலையத்தில்சோலார் பதிக்க அறிவுரை
சுகாதார நிலையத்தில்சோலார் பதிக்க அறிவுரை
ADDED : மார் 15, 2025 02:25 AM
சுகாதார நிலையத்தில்சோலார் பதிக்க அறிவுரை
சேலம்:சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம், 9வது வார்டில் வீராணம் பிரதான சாலை, வள்ளுவர் காலனியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன், நேற்று ஆய்வு செய்தனர். ஆரம்ப சுகாதார நிலைய கட்டட மேல் தளத்தில் சோலார் தகடு பதிக்கவும், 2,000 லிட்டர் கொள்ளளவில் குடிநீர் தொட்டி, முகப்பில் பேவர் பிளாக், சுற்றுச்சுவர் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல் கனகராஜ கணபதி தெருவில் கட்டப்பட்டு வரும் சுகாதார நிலைய கட்டடங்களை பார்வையிட்டு, பணியை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டது. கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், மாநகர நல அலுவலர் முரளிசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.