ADDED : மார் 13, 2025 02:11 AM
தாமரை மலர்களால்தாயாருக்கு யாகம்
சேலம்:சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலிலில் பாலாலயம் செய்து கும்பாபி ேஷக திருப்பணி நடக்கும் நிலையில், சுந்தரவல்லி தாயாருக்கு உகந்த மாசி மக நட்சத்திரமான நேற்று, 108 தாமரை மலர்கள், மூலிகைகளால் தாயாருக்கு யாகம் நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு தொடங்கி, 11:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவடைந்தது.
உற்சவர் தாயாருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்கள், யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலசங்களில் இருந்த புனிதநீரால் அபி ேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் பூஜை செய்யப்பட்டது. மேலும் இக்கோவில் கும்பாபிேஷகம், ஏப்., 20ல் நடத்த திட்டமிட்டு திருப்பணி நடந்து வருகிறது.