/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கால்வாய் கட்டாததால் சாலை அமைக்க எதிர்ப்பு கால்வாய் கட்டாததால் சாலை அமைக்க எதிர்ப்பு
கால்வாய் கட்டாததால் சாலை அமைக்க எதிர்ப்பு
கால்வாய் கட்டாததால் சாலை அமைக்க எதிர்ப்பு
கால்வாய் கட்டாததால் சாலை அமைக்க எதிர்ப்பு
ADDED : ஜூலை 02, 2024 06:59 AM
சேலம் : சேலத்தில் கால்வாய் கட்டாததால், சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சேலம் 4 ரோடு அருகே உள்ள அம்பேத்கர் தெருவில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் சாலை அமைக்க, நேற்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிக-ளுடன் மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'சாலை அமைக்கும் இடத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயை கான்கிரீட் மூலம் கட்டி தர வேண்டும் என, ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தோம். இந்த பணியை செய்யாமல் சாலை அமைக்க மட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இதுதொடர்பாக கேட்டால் சாலைக்கு தான் நிதி ஒதுக்கீடு செய்-யப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள். சரியான கால்வாய் இல்லா-ததால் மழை காலங்களில் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே கால்வாய் கட்டி விட்டு சாலை அமைக்க வேண்டும்,' என்றனர்.