/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி 6 மாதங்களுக்கு பின் சிக்கிய தம்பதி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி 6 மாதங்களுக்கு பின் சிக்கிய தம்பதி
சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி 6 மாதங்களுக்கு பின் சிக்கிய தம்பதி
சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி 6 மாதங்களுக்கு பின் சிக்கிய தம்பதி
சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி 6 மாதங்களுக்கு பின் சிக்கிய தம்பதி
ADDED : மார் 23, 2025 01:02 AM
சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி
6 மாதங்களுக்கு பின் சிக்கிய தம்பதி
சேலம்:
சேலம், கந்தம்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில், 50. அவரது மனைவி செந்தமிழ்செல்வி, 45. இவர்கள், 2023ல் தீபாவளி பண்டிகைக்கு கவர்ச்சிகர முதலீடு திட்டங்களை அறிவித்தனர். ஏராளமானோர் பணம் செலுத்திய நிலையில், தீபாவளிக்கு முன் தம்பதியர் தலைமறைவாகினர்.
பாதிக்கப்பட்ட மக்கள் புகார்படி, சேலம் மாநகர் குற்றப்பிரிவு போலீசார், தம்பதியை தேடினர். 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று இரவு, வீடு அருகே இருந்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர். இதை அறிந்து மக்கள் திரண்டு, டவுன் ஸ்டேஷன் முன் குவிந்தனர். பின் போலீசார் அறிவுரையை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
போலீசார் கூறுகையில், 'பதிவான புகார்கள் மூலம், 25 லட்சம் ரூபாய் மோசடி உறுதியாகி உள்ளது. விடுபட்ட மக்கள், உடனே புகார் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகே, மோசடி தொகை முழுமையாக தெரியவரும். தம்பதியின் கூட்டாளிகளை தேடுகிறோம்' என்றனர்.