/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வியாபாரிகள் ஒதுக்கிய கத்தரிக்காய் சாலையோரம் கொட்டிய விவசாயி வியாபாரிகள் ஒதுக்கிய கத்தரிக்காய் சாலையோரம் கொட்டிய விவசாயி
வியாபாரிகள் ஒதுக்கிய கத்தரிக்காய் சாலையோரம் கொட்டிய விவசாயி
வியாபாரிகள் ஒதுக்கிய கத்தரிக்காய் சாலையோரம் கொட்டிய விவசாயி
வியாபாரிகள் ஒதுக்கிய கத்தரிக்காய் சாலையோரம் கொட்டிய விவசாயி
ADDED : செப் 17, 2025 01:44 AM
மேட்டூர், வியாபாரிகள் வாங்காமல் ஒதுக்கிய சொத்தை கத்தரிகாய்களை, விவசாயி ஒருவர் சாலையோரம் மொத்தமாக கொட்டி சென்றார்.மேட்டூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ, 40 ரூபாயாக இருந்த கண்ணாடி கத்தரிக்காய் நேற்று, 25 ரூபாயாகவும், 30 முதல், 35 ரூபாயாக இருந்த வரி கத்தரிக்காய் நேற்று, 20 ரூபாயாகவும் விலை குறைந்தது.
அதே நேரம், மேட்டூர் தினசரி சந்தையில் நேற்று காலை வியாபாரிகள் கிராமங்களில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த கத்தரிகாய்களை ஒரு கிலோ, 10 முதல், 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர்.கத்தரிக்காய் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது, மேட்டூர் சுற்றுப்பகுதியில் சாகுபடி செய்த விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
நேற்று காலை, மேட்டூர் தினசரி சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு சென்ற கத்தரிகாய்களை, வியாபாரிகள் சொத்தை மற்றும் அழுகல் என பெரும்பாலானவற்றை வாங்காமல் கழித்து விட்டனர். அதனை விவசாயிகளே தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் விவசாயி ஒருவர், நேற்று சொத்தை மற்றும் அழுகல் கத்தரிக்காய்களை மேட்டூர்-மைசூரு நெடுஞ்சாலையோரம் சென்றாய பெருமாள் கோவில் அருகே மொத்தமாக கொட்டி சென்றார். கத்தரியில் பூச்சி தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், விலையும் வீழ்ச்சியடைந்தது மேட்டூர் சுற்றுப்பகுதி விவசாயி
களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.