/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல் அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல்
அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல்
அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல்
அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல்
ADDED : மார் 27, 2025 01:07 AM
அண்ணன் சடலத்துக்கு வழிவிடாததம்பியை கண்டித்து சாலை மறியல்
வாழப்பாடி:வாழப்பாடி, நடுப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 85. உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். உடலை, காலை, 11:30 மணிக்கு, ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, இறந்தவரின் தம்பியான சின்னதம்பி, 78, நிலப்பிரச்னை முன்விரோதத்தில், ஆறுமுகம் சடலத்தை கொண்டு செல்ல வழி விட மறுத்தார்.
இதை கண்டித்து ஆறுமுகத்தின் உறவினர்கள், அயோத்தியாப்பட்டணம் - பேளூர் நெடுஞ்சாலையில், சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்தியதில், மறியலை கைவிட்டு, ஆறுமுகம் உடலை கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்தனர்.