Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெளிமாநில தொழிலாளர் விபரம்ஒரு மாதத்தில் பதிவேற்ற இலக்கு

வெளிமாநில தொழிலாளர் விபரம்ஒரு மாதத்தில் பதிவேற்ற இலக்கு

வெளிமாநில தொழிலாளர் விபரம்ஒரு மாதத்தில் பதிவேற்ற இலக்கு

வெளிமாநில தொழிலாளர் விபரம்ஒரு மாதத்தில் பதிவேற்ற இலக்கு

ADDED : மார் 20, 2025 01:20 AM


Google News
வெளிமாநில தொழிலாளர் விபரம்ஒரு மாதத்தில் பதிவேற்ற இலக்கு

சேலம்:வெளிமாநில தொழிலாளர் விபரத்தை, ஒரு மாதத்தில் பதிவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் தொழிலாளர் அமலாக்க உதவி கமிஷனர் திருநந்தன் அறிக்கை:சேலம் மாவட்டத்தில் கடைகள், வணிகம், உணவு நிறுவனங்கள், செங்கல் சூளைகள், கோழிப்பண்ணைகள் உள்பட அனைத்து நிறுவன உரிமையாளர்கள், அவரவர் நிறுவனத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை பணி அமர்த்தும்போது, அவர்களது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் விபரத்தை தொழிலாளர் துறையின், https://labour.tn.gov.in/ism/ என்ற வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். வெளிமாநில தொழிலாளர் விபரம், எந்த விடுதலும் இன்றி முழுமையாக, மார்ச் 19(நேற்று) முதல், ஒரு மாதத்தில் பதிவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வலைதளத்தில் பதிவு செய்யாத உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பதிவேற்றுவதில் உதவி தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம்.

அதன்படி ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையத்துக்கு, 9787379061; வாழப்பாடி, 9788964495; மேட்டூர், ஓமலுார், காடையாம்பட்டி, 9488877326; சேலம் மாநகர், ஏற்காடு, 7373532073, 9787379061, 9790741107, 8248938528, இளம்பிள்ளை, வீரபாண்டி, ஆட்டையாம்பட்டிக்கு, 8248938528 என்ற எண்களில் அழைக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us