Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தண்டாயுதபாணி கோவிலில்முகூர்த்த கம்பம் நடல்

தண்டாயுதபாணி கோவிலில்முகூர்த்த கம்பம் நடல்

தண்டாயுதபாணி கோவிலில்முகூர்த்த கம்பம் நடல்

தண்டாயுதபாணி கோவிலில்முகூர்த்த கம்பம் நடல்

ADDED : மார் 13, 2025 02:12 AM


Google News
தண்டாயுதபாணி கோவிலில்முகூர்த்த கம்பம் நடல்

சேலம்:சேலம், அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர திருவிழா வரும் ஏப்., 4 முதல், 16 வரை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, குமரகிரி மலை அடிவாரத்தில் முகூர்த்த கம்பம் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக கம்பத்துக்கு அபி ேஷகம் செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம், மலர்களால் அலங்கரித்து வேத மந்திரங்கள், 'முருகனுக்கு அரோகரா' கோஷம் முழங்க கம்பம் நடப்பட்டது. இதில் செயல் அலுவலர் ராஜதிலகம், அறங்காவலர் குழு தலைவர் ஆறுமுகம், செயலர் ராஜமாணிக்கம், பொருளாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் திருவிழா, ஏப்., 4ல் தேவார திருப்புகழ் பாராயணத்துடன் தொடங்கும். அன்று மாலை திருவிளக்கு பூஜை நடக்கும். பங்குனி உத்திரம், 11ல் காவடி ஊர்வலங்களுடன் நடைபெறும். 16ல் திருவிழா நிறைவு பெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us