/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முன்னாள் மத்திய இணை அமைச்சர் மீதுபுகார் தெரிவித்து சேலத்தில் பெண் தர்ணா முன்னாள் மத்திய இணை அமைச்சர் மீதுபுகார் தெரிவித்து சேலத்தில் பெண் தர்ணா
முன்னாள் மத்திய இணை அமைச்சர் மீதுபுகார் தெரிவித்து சேலத்தில் பெண் தர்ணா
முன்னாள் மத்திய இணை அமைச்சர் மீதுபுகார் தெரிவித்து சேலத்தில் பெண் தர்ணா
முன்னாள் மத்திய இணை அமைச்சர் மீதுபுகார் தெரிவித்து சேலத்தில் பெண் தர்ணா
ADDED : மார் 14, 2025 01:50 AM
முன்னாள் மத்திய இணை அமைச்சர் மீதுபுகார் தெரிவித்து சேலத்தில் பெண் தர்ணா
சேலம் :சேலம், அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் செல்வராணி, 54; சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து தர்ணாவில் ஈடுபட்டார். பாதுகாப்பு போலீசார் பேச்சு நடத்தி, 'புகார் தெரிவிக்க மனுவுடன் வர வேண்டும்' என கூறி அனுப்பினர்.
தொடர்ந்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடந்து கொண்டிருந்த குடிநீர் ஆலோசனை கூட்ட பகுதிக்கு சென்று, அங்கும் தர்ணாவில் ஈடுபட்டார். பாதுகாப்பு போலீசார் 'கூட்டம் நடக்கும்போது இதுபோல் செய்யக்கூடாது' என கூறினர்.
ஆனால் அப்பெண் உருண்டு புரண்டு போராடவே, மாநகர போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது செல்வராணி கூறியதாவது: என் நிலம் நாமக்கல்லில் உள்ளது. 2008ல் அந்த நிலத்தை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் அபகரித்துக்
கொண்டார். இதுகுறித்து நாமக்கல் டி.எஸ்.பி., அலுவலகம், சேலம் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது வீடில்லை. தொழில் இழந்து வருமானமின்றி நிற்கிறேன். மாவட்ட நிர்வாகம், அமைச்சர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் கூறுகையில், 'உண்மையில் நிலம் அபகரிக்கப்பட்டதா என தெரியவில்லை. சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என
தெரிகிறது' என்றனர்.