/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ தடுப்பு இல்லாத குளக்கரை வாகன ஓட்டிகள் கடும் அச்சம் தடுப்பு இல்லாத குளக்கரை வாகன ஓட்டிகள் கடும் அச்சம்
தடுப்பு இல்லாத குளக்கரை வாகன ஓட்டிகள் கடும் அச்சம்
தடுப்பு இல்லாத குளக்கரை வாகன ஓட்டிகள் கடும் அச்சம்
தடுப்பு இல்லாத குளக்கரை வாகன ஓட்டிகள் கடும் அச்சம்
ADDED : ஜூன் 04, 2025 02:25 AM

சோளிங்க:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பில்லாஞ்சி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து ஸ்ரீகாளிகாபுரம் செல்லும் இணைப்பு சாலைக்கு எதிரில் குளம் அமைந்துள்ளது.
பழமையான இந்த குளத்திற்கு சீரான நீர்வரத்து இருப்பதால், கோடைக்காலத்திலும் வற்றாமல் இருக்கும். பில்லாஞ்சி கிராமம், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, தடுப்பு ஏதும் இன்றி உள்ள இந்த குளத்தின் கரையில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டி சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டது.
அதை தொடர்ந்து, செடி, கொடிகளும் அகற்றப்பட்டு குளக்கரை சீரமைக்கப்பட்டது.
தற்போது நெடுஞ்சாலைக்கும், குளத்திற்கும் இடையே சமவெளி ஏற்பட்டுள்ளது.
இதனால், சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குளக்கரையில் இரும்பு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த குளக்கரையின் எதிரே, ஸ்ரீகாளிகாபுரம் கூட்டுச்சாலையில் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.