/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளம் துண்டானதால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம் அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளம் துண்டானதால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளம் துண்டானதால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளம் துண்டானதால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளம் துண்டானதால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
ADDED : ஜூன் 28, 2025 03:58 AM
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, சித்தேரியில் தண்டவாளம் துண்டானதால், ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பய-ணிகள் அவதியடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்திலிருந்து, வேலுார் நோக்கி சித்தேரி ரயில்வே ஸ்டேஷன் அருகே சரக்கு ரயில் நேற்று இரவு, 9:12 மணிக்கு சென்று கொண்டிருந்தது.அப்போது, தண்டவாளத்தில் வித்தியாசமான சத்தம் வந்ததால், ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளதை உணர்ந்த சரக்கு ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தி, சித்தேரி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு, அங்கி-ருந்து அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்-பட்டது.
இதையடுத்து சென்னையிலிருந்து அரக்கோணம் வரும் ரயில்கள் மற்றும் காட்பாடியிலிருந்து அரக்கோணம் நோக்கி செல்லக்கூடிய ரயில்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆங்காங்கே நிறுத்தப்பட்-டன. ரயில் தண்டவாள உடைப்பை சரி செய்ய, அரக்கோணத்-திலிருந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்-தபோது, தண்டவாளத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த வெல்டிங் உடைந்து, துண்டாகி கிடந்தது தெரியவந்தது.
பின்னர் அரக்கோணம், காட்பாடி மற்றும் வாலாஜாவிலிருந்து ரயில்வே ஊழியர்கள் சென்று தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னையிலிருந்து அரக்-கோணம் வழியாக செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், நீல-கிரி எக்ஸ்பிரஸ் ரயில், உள்ளிட்ட சில ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்-தனர்.
நேற்று இரவு, 9:28 மணி வரை ரயில் தண்டவாள சீரமைப்பு பணி முடியவில்லை. மேலும் ஒரு மணி நேரம் காலதாமதமாகும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். அதற்குள் மாற்று ஏற்-பாடு செய்து வேறு டிராக்கில், ரயிலை இயக்குவதற்கான நடவ-டிக்கையிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.