/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ நெடுஞ்சாலையில் குப்பை கழிவு சோளிங்கர் நகராட்சி அலட்சியம் நெடுஞ்சாலையில் குப்பை கழிவு சோளிங்கர் நகராட்சி அலட்சியம்
நெடுஞ்சாலையில் குப்பை கழிவு சோளிங்கர் நகராட்சி அலட்சியம்
நெடுஞ்சாலையில் குப்பை கழிவு சோளிங்கர் நகராட்சி அலட்சியம்
நெடுஞ்சாலையில் குப்பை கழிவு சோளிங்கர் நகராட்சி அலட்சியம்
ADDED : மே 17, 2025 09:02 PM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாடு முழுதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், அருகே உள்ள திருத்தணி முருகர் கோவிலுக்கும் தரிசனம் செய்ய வருகின்றனர். சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக திருத்தணிக்கு வருகின்றனர்.
இந்த மார்க்கத்தில், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பில்லாஞ்சி ஏரிக்கரையில், திருத்தணி செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி வழிநெடுக குப்பை கொட்டப்பட்டுள்ளது.
சோளிங்கரில் சாலையோர கடைகள் நடத்துபவர்களில் ஒரு சிலர், மூட்டைகளில் வாயிலாக குப்பையை கொண்டு வந்து கொட்டுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். கோவில் நகரின் துாய்மையை கெடுக்கும் வகையில், சாலையோரத்தில் கொட்டப்பட்டும் குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஏரியின் நீர்வளமும், அருகில் உள்ள வயல்வெளியின் மண்வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.