/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/கோவில் வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத கடை மீட்புகோவில் வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத கடை மீட்பு
கோவில் வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத கடை மீட்பு
கோவில் வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத கடை மீட்பு
கோவில் வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத கடை மீட்பு
ADDED : மே 22, 2025 02:24 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், மேனகா என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்த கடைக்கு நீண்டகாலமாக முறையாக வாடகை செலுத்தவில்லை. இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும்' என, உத்தரவு பிறப்பித்தார்.
இதை தொடர்ந்து, வேலுார் சரக அறநிலைய துறை உதவி ஆணையர் சங்கர், சோளிங்கர் கோவில் செயல் அலுவலர் ராஜா, காவல் துறையினர் உள்ளிட்டோர் முன்னிலையில், நேற்று சம்பந்தப்பட்ட கடை மீட்கப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.