/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ விபத்தில் பா.ம.க., பிரமுகர் பலி கொலை என வதந்தியால் மறியல் விபத்தில் பா.ம.க., பிரமுகர் பலி கொலை என வதந்தியால் மறியல்
விபத்தில் பா.ம.க., பிரமுகர் பலி கொலை என வதந்தியால் மறியல்
விபத்தில் பா.ம.க., பிரமுகர் பலி கொலை என வதந்தியால் மறியல்
விபத்தில் பா.ம.க., பிரமுகர் பலி கொலை என வதந்தியால் மறியல்
ADDED : ஜூன் 13, 2025 02:17 AM
சோளிங்கர்:விபத்தில் இறந்த பா.ம.க., பிரமுகரை, கொலை செய்ததாக பரவிய தகவலால் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி, 48. ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட பா.ம.க., இளைஞரணி தலைவர்.
இவர், அரக்கோணம் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் பைக்கில் வீடு திரும்பினார். வீட்டின் அருகே, வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்ததில் உயிரிழந்தார்.
இந்நிலையில், விபத்து ஏற்படுத்தி அவரை கொலை செய்ததாக தகவல் பரவியது. ஆத்திரமடைந்த பா.ம.க.,வினர், 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, சோளிங்கர் - வாலாஜா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் டி.எஸ்.பி., ஜாபர் சித்திக், போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிட செய்தனர்.
போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், வேகத்தடை மீது ஏறி இறங்கியதில், நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. பதற்றம் நிலவுவதால், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.