/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல் இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : மே 15, 2025 06:57 PM
அரக்கோணம்,:அரக்கோணத்தில், இரவு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரத்தில் நள்ளிரவு 11:50 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இரவில் மின்சாரமின்றி கடும் அவதிக்கு ஆளாகினர்.
அதிகாலை 5:00 மணி வரை மின் இணைப்பு தரப்படாத நிலையில், ஆத்திரமடைந்த மக்கள், விண்டர்பேட்டை பகுதியில், அ.தி.மு.க., நகர்மன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அதிகாலை, 5:30 மணிக்கு, காஞ்சிபுரம் - திருப்பதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அரக்கோணம் டவுன் போலீசார் பேச்சு நடத்தி, அரக்கோணம் மின் அலுவலக ஊழியர்களிடம் பேசி, மின் இணைப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.