/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/கன்டெய்னர் லாரி மோதல் அரசு பள்ளி ஆசிரியை பலிகன்டெய்னர் லாரி மோதல் அரசு பள்ளி ஆசிரியை பலி
கன்டெய்னர் லாரி மோதல் அரசு பள்ளி ஆசிரியை பலி
கன்டெய்னர் லாரி மோதல் அரசு பள்ளி ஆசிரியை பலி
கன்டெய்னர் லாரி மோதல் அரசு பள்ளி ஆசிரியை பலி
ADDED : பிப் 25, 2024 05:35 PM
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அருகே, ஸ்கூட்டி மீது கன்டெய்னர் லாரி மோதியதில், அரசு பள்ளி ஆசிரியை பலியானார்.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் ராமதாஸ், 59; இவர் மனைவி ஜமுனா, 55; அரசு பள்ளி ஆசிரியை; இருவரும் நேற்று காலை, 9:00 மணியளவில், டி.வி.எஸ்., ஸ்கூட்டியில், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்றபோது, அவ்வழியாக சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மோதியதில், ஜமுனா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ராமதாஸ் படுகாயமடைந்து, ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராணிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.