/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சோளிங்கர் ரோப் காரில் மாற்றுத்திறனாளிக்கு சலுகை சோளிங்கர் ரோப் காரில் மாற்றுத்திறனாளிக்கு சலுகை
சோளிங்கர் ரோப் காரில் மாற்றுத்திறனாளிக்கு சலுகை
சோளிங்கர் ரோப் காரில் மாற்றுத்திறனாளிக்கு சலுகை
சோளிங்கர் ரோப் காரில் மாற்றுத்திறனாளிக்கு சலுகை
ADDED : ஜூன் 05, 2025 02:34 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு, கடந்தாண்டு மார்ச் மாதம் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த ரோப்கார் வாயிலாக, தினமும் 1,000 பேர் வரை மலைக்கோவிலுக்கு பயணிக்கின்றனர். குறிப்பாக, படிகள் வழியாக மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரோப்கார் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
ரோப்காரில் பயணிக்க நபருக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், ரோப்காரில் பயணிக்கும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு கட்டணம் இல்லாத பயண சலுகை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு ரோப்காரில் பயணிக்கும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு கட்டண மில்லாத பயண சலுகை செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரோப்கார் வளாகத்தில் சக்கர நாற்காலி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.