/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/மத்திய தொழிற்பாதுகாப்பு படை பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்குமத்திய தொழிற்பாதுகாப்பு படை பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு
மத்திய தொழிற்பாதுகாப்பு படை பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு
மத்திய தொழிற்பாதுகாப்பு படை பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு
மத்திய தொழிற்பாதுகாப்பு படை பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு
ADDED : ஜன 25, 2024 01:00 PM
அரக்கோணம் : போலி சான்றிதழ் கொடுத்து, மத்திய தொழிற்பாதுகாப்பு படை பணிக்கு சேர்ந்த பெண் மீது, தக்கோலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில், மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு, நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்களுக்கு, பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த ராம்அவதார் என்பவரின் மகள் மாயா, 27; இவர், மத்திய தொழிற்பாதுகாப்பு படை பணியில், கான்ஸ்டபிள் பணிக்கு கடந்தாண்டு ஆக.,ல் தேர்வானார். அதற்காக தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், கடந்த அக்.,ல் சேர்ந்து, கடந்த, 3 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், அவரது சான்றிதழின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய, நாகாலாந்து மாநிலத்திற்கு அனுப்பி வைத்ததில், அவரது ஜாதி சான்றிதழ் போலி என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது, துறை ரீதியாக, மத்திய தொழிற் பாதுகாப்பு படை மூலம், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தக்கோலம் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான மாயாவை தேடி வருகின்றனர்.