/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ரயிலில் 'சீட்' பிடிக்க தகராறு 2 பேரை வெட்டியவர் கைதுரயிலில் 'சீட்' பிடிக்க தகராறு 2 பேரை வெட்டியவர் கைது
ரயிலில் 'சீட்' பிடிக்க தகராறு 2 பேரை வெட்டியவர் கைது
ரயிலில் 'சீட்' பிடிக்க தகராறு 2 பேரை வெட்டியவர் கைது
ரயிலில் 'சீட்' பிடிக்க தகராறு 2 பேரை வெட்டியவர் கைது
ADDED : ஜன 28, 2024 01:41 AM
அரக்கோணம்: சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் பொது பெட்டியில் இருக்கை பிடிப்பது தொடர்பாக, மூன்று வாலிபர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் கத்தியால் மற்ற, இரு வாலிபர்களை சரமாரியாக வெட்டினார். இதனால், ரயில் பெட்டியில் பதற்றம் ஏற்பட்டது. ரயில், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வந்த போது, பாதுகாப்பு பணியிலிருந்த, அரக்கோணம் ரயில்வே போலீசார், மூன்று பேரையும் பிடித்தனர்.
கத்தி வெட்டில் காயமடைந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பண்டிமீனா, 30, ஷாமி சிங், 25, ஆகியோரை, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து, வாலிபர்களை வெட்டிய அரக்கோணத்தை சேர்ந்த மணிவண்ணன், 29, என்பவரை கைது செய்தனர்.