/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ ப.வேலுார் இன்ஸ்பெக்டர் மீது குவிந்த புகார்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை ப.வேலுார் இன்ஸ்பெக்டர் மீது குவிந்த புகார்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை
ப.வேலுார் இன்ஸ்பெக்டர் மீது குவிந்த புகார்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை
ப.வேலுார் இன்ஸ்பெக்டர் மீது குவிந்த புகார்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை
ப.வேலுார் இன்ஸ்பெக்டர் மீது குவிந்த புகார்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை
ADDED : ஜூன் 22, 2025 01:32 AM
நாமக்கல், மணல் கடத்தல், லாட்டரி வியாபாரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக, எழுந்த புகாரின் அடிப்படையில் ப.வேலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த, 2024 ஆக., 16ல், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டு, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டார். அங்கு பணியில் அமர்ந்த நாள் முதல், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக, மணல் கடத்தலுக்கு துணைபோனார். அதேபோல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்கு சாதகமாக நடந்து வருகிறார். இதனால், கூலித்தொழிலாளர்கள் அதிகமுள்ள, ப.வேலுார் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு எடுத்துக்காட்டாக, ப.வேலுார் அடுத்த அணிச்சம்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியம், 53, என்பவர், கடந்த, 16ல், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். விசாரணையில், 'ப.வேலுார் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடப்பதாகவும், இதுகுறித்து புகார் செய்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அது தொடர்பாகவும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன்' என, தெரிவித்தார்.
இதற்கிடையே, 'மணல் அள்ளுவதை கண்டுகொள்ள வேண்டாம்' என்பதற்காக, மணல் திருட்டில் ஈடுபடும் கும்பலுக்கு சாதகமாக நடக்க டீலிங் பேசியதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் குவிந்தன.
இந்நிலையில், நேற்று நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டம் முடிந்ததும், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கடிதம் வழங்கப்பட்டது. பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம் கேட்டபோது, ''சென்னையில் இருந்து, அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றவும் என, ஆர்டர் வந்தது. ஆனால், என்ன காரணம் என தெரியாது,'' என்றார்.