ADDED : ஜூன் 06, 2024 07:55 PM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள, தனியார் ரசாயன தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில், ஒப்பந்த தொழிலாளியாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ேஷக் மபுஜ் ஆலம், 40, என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர், நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.