/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ பாலாற்றின் குறுக்கே பாலம் சீரமைப்பு பணியால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பாலாற்றின் குறுக்கே பாலம் சீரமைப்பு பணியால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பாலாற்றின் குறுக்கே பாலம் சீரமைப்பு பணியால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பாலாற்றின் குறுக்கே பாலம் சீரமைப்பு பணியால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பாலாற்றின் குறுக்கே பாலம் சீரமைப்பு பணியால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ADDED : ஜூலை 26, 2024 10:08 PM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் சீரமைக்கும் பணி நடப்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால், பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றில் போக்குவரத்து வசதிக்காக மூன்று பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில், பெங்களூரு - வேலுார் - சென்னை செல்லும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு பாலம், 12 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் உறுதி தன்மை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அவற்றை சீரமைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
அதனால், இந்த பாலம் வழியாக சென்ற அனைத்து வாகனங்களும், மற்றொரு பாலத்தின் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி நேற்று முதல், ஒரே பாலத்தில் இரு மார்க்கமும் செல்லும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இரு புறமும், 2 கி.மீ துாரத்திற்கு அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றன.
இதனால், 2 கி.மீ., துாரம் கடந்து செல்ல, 2 மணி நேரம் ஏற்பட்டதால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.