/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ நகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 11, 2025 11:14 PM

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்டு 36 வார்டுகள் உள்ளன. இங்கு நகராட்சி சார்பில் வீட்டு வரி, குழாய் வரி வசூல் செய்யும் பணி நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று காலை நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு நேருஜி நகர் முதல் குறுக்கு தெருவில், நகராட்சி வருவாய் உதவியாளர் ஆதாம் ஷெரீப், 35, என்பவர் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே தெருவில் வசிக்கும் பாஸ்கர், 48, மூன்றாண்டாக வீட்டு வரி செலுத்தாதது தெரியவந்தது.
இதையடுத்து ஷெரிப், வரி வசூலிக்க பாஸ்கர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பாஸ்கர் மகன் கார்த்திக் வீட்டில் இருந்த நிலையில், வீட்டு வரி செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது 'வரி செலுத்துகிறேன்' என, கார்த்திக் கூறியுள்ளார்.
'எப்போது செலுத்துவீர்கள்' என, ஷெரீப் கேட்டபோது, தகாத வார்த்தைகளால் பேசிய கார்த்திக், திடீரென காரை ஷெரீப் மீது ஏற்றுவது போல் சென்று, 'உனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஒட்டப்படும். இரண்டு துண்டாக வெட்டி விடுவேன்' என மிரட்டியபடி சென்றதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து, நேற்று மதியம் நகராட்சி அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஷெரீப் அளித்த புகாரின்படி, அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.