/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ வெங்குப்பட்டுக்கு கூடுதல் பேருந்து இயக்க எதிர்பார்ப்பு வெங்குப்பட்டுக்கு கூடுதல் பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
வெங்குப்பட்டுக்கு கூடுதல் பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
வெங்குப்பட்டுக்கு கூடுதல் பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
வெங்குப்பட்டுக்கு கூடுதல் பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 14, 2024 01:26 AM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து திருத்தணிக்கு ஆர்.கே.பேட்டை வழியாக மாநில நெடுஞ்சாலையில் தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சோளிங்கரில் இருந்து பரவத்துார் மற்றும் வெங்குப்பட்டு கிராமங்கின் வழியாக 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை இணைக்கும் சாலையில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
சோளிங்கரில் இருந்து வெங்குப்பட்டு, பரவத்துார் வழியாக தனியார் மினி பேருந்து ஒன்று கடந்த 40 ஆண்டுகளாக சேவை ஆற்றி வருகிறது.
இதனால், கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள் திருத்தணி மற்றும் சோளிங்கர் நகரங்களுக்கு எளிதாக பயணித்து வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வரும் இந்த பேருந்துக்காக காத்திருந்து பயணிக்கின்றனர்.
இது தவிர திருத்தணியில் இருந்து அகூர் அல்லது புச்சிநாயுடு கண்டிகை மார்க்கமாக நகர பேருந்து ஒன்றும் இயக்கப்பட்டு வருகிறது.
திருத்தணியில் இருந்து புச்சிநாயுடு கண்டிகை, வெங்குப்பட்டு மற்றும் கொண்டாபுரம் வழியாகவும் சோளிங்கருக்கு குறுக்கு பாதை உள்ளது.
தனியார் நிறுவன சரக்கு வாகனங்கள் இந்த வழியாக பயணிக்கின்றன. ஆர்.கே.பேட்டை நகர நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாகவும், விரைவாகவும் பயணிக்க உகந்த இந்த மார்க்கத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.