/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ ரயிலில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ரயிலில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரயிலில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரயிலில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரயிலில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஜூலை 08, 2024 05:17 PM
அரக்கோணம்:
அரக்கோணத்தில் ரயிலில் கடத்திச் சென்ற, 700 கிலோ ரேஷன் அரிசியை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வழியாக, ஆந்திரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், மெமு மின்சார ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகார் படி, ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் மாலை ஆந்திரா, திருத்தணி செல்லும் ரயில்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில், அரக்கோணத்தில் வந்து நின்றது. அதில் சோதனை செய்தபோது, தலா, 50 கிலோ எடையுடன், 14 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்து, அவற்றை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.