/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை
கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை
கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை
கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை
ADDED : ஜூலை 26, 2024 01:56 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஒழுகூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முரளி, 40.
இவரது மனைவி உமாராணி, 36. இருவரும் நேற்று காலை கூலி வேலைக்கு சென்ற நிலையில், அவர்களது, 9 வயது மகன், 7 வயது மகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். பணி முடிந்து மாலை உமாராணி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 20 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.