/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது
ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது
ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது
ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது
ADDED : ஜூலை 12, 2024 10:49 PM
அரக்கோணம்:வடமாநிலத்தில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்துவதாக வேலூர் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் வழியாக சென்றது.
ரயில் அரக்கோணம் நடைமேடைக்கு வந்த போது பொது பெட்டியில் சந்தேகிக்கும் வகையில் இருந்த இருவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர்களான சுப்பிரமணியம், 21 மற்றும் அப்துல், 18 என்பதும் வடமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
பறிமுதல் செய்த கஞ்சா அரக்கோணம் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.