/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/துப்பாக்கி முனையில் இளைஞர் கைது 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்துப்பாக்கி முனையில் இளைஞர் கைது 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
துப்பாக்கி முனையில் இளைஞர் கைது 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
துப்பாக்கி முனையில் இளைஞர் கைது 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
துப்பாக்கி முனையில் இளைஞர் கைது 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
ADDED : ஜன 05, 2024 12:47 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் சுங்கத்துறையினர் துப்பாக்கி முனையில் இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து 6 கிலோ கடத்தல் தங்க கட்டியை பறிமுதல் செய்தனர்.
தங்கச்சிமடம் தர்கா பஸ் ஸ்டாப்பில் டூவீலரில் சந்தேகத்துக்குரிய வகையில் இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் 8 பேர் கொண்ட குழுவினர் துப்பாக்கியை காட்டி எச்சரித்து இளைஞரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அவரிடம் இருந்த 6 கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர்.
இக் கட்டிகள் இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் தங்க கட்டிகள் தங்கச்சிமடத்தில் பதுக்கி வைத்து உள்ளாரா என கைதான அவரிடம் விசாரணை நடக்கிறது. சிக்கிய தங்க கட்டியின் மதிப்பு, கைதானவரின் பெயர், விபரம் வெளியிடப்படவில்லை.