/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரத்தில் யோகா ஆசிரியர்கள் கண்ணில் கருப்பு துணிகட்டி போராட்டம் ராமநாதபுரத்தில் யோகா ஆசிரியர்கள் கண்ணில் கருப்பு துணிகட்டி போராட்டம்
ராமநாதபுரத்தில் யோகா ஆசிரியர்கள் கண்ணில் கருப்பு துணிகட்டி போராட்டம்
ராமநாதபுரத்தில் யோகா ஆசிரியர்கள் கண்ணில் கருப்பு துணிகட்டி போராட்டம்
ராமநாதபுரத்தில் யோகா ஆசிரியர்கள் கண்ணில் கருப்பு துணிகட்டி போராட்டம்
ADDED : ஜூன் 21, 2025 11:24 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பட்டம் மற்றும் பட்டயம் படித்த யோகா ஆசிரியர்கள்2 ஆண்டுகளாக வழங்கப்படாத சம்பளத்தை வழங்க கோரியும், யோகா ஆசிரியர்களை பள்ளிகளில் பணி நியமனம் செய்யக்கோரியோகா தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.யோகா ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த யோகா ஆசிரியர்களுக்கு 2 ஆண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள்ஒழுக்க கேடாக உள்ளனர். மாணவர்களின் மனதை கட்டுப்படுத்தவும், அவர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் யோகா கற்பிக்கப்பட வேண்டும். இதற்காக பள்ளிகளில் யோகா பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க மாநில அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளை கண்டித்து உலக யோகா தினத்தைகருப்பு தினமாக கடைப்பிடித்து கண்ணில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு யோகாசெய்து போராட்டம் நடத்தினர். இதில் மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை, சிவகங்கை மாவட்டபொறுப்பாளர் ஷாஜஹான், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீதரன், கன்னியாகுமரிமாவட்ட பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் தர்மராஜ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.