பள்ளி, கல்லுாரியில் யோகா தின விழா
பள்ளி, கல்லுாரியில் யோகா தின விழா
பள்ளி, கல்லுாரியில் யோகா தின விழா
ADDED : ஜூன் 23, 2025 11:32 PM

தேவிபட்டினம்: தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா பள்ளி தாளாளர் சுவாமி ருத்ரானந்தா தலைமையிலும், முதல்வர் தீனதயாளன் முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது. முன்னதாக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் யோகாசனங்களை செய்து காட்டினார்.
யோகா தின விழா கொண்டாடுவதன் அவசியம் குறித்தும், யோகா பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஆசிரியர்கள் விளக்கினர். ஆதி யோகா பவுண்டேஷன் நிறுவனர் மலைச்சாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.
*பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் சூசைநாதன் தலைமை வகித்தார்.
என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பவிதா வரவேற்றார். ராமநாதபுரம் ஈசா யோகா மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லுாரி செயலர் எட்வர்ட் பிரான்சிஸ், திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் திருமணி பொற்செல்வி நன்றி கூறினார்.
ஆங்கிலத்துறை மாணவி மோனிஷா தொகுத்து வழங்கினார்.