ADDED : செப் 18, 2025 05:22 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் விருதுநகர் ரோட்டரி சங்கம், ராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம், செய்யது அம்மாள் செவிலியர் பள்ளி ரோட்டராக்ட் சங்கம் இணைந்து பெண்களின் பாதுகாப்பு, உரிமை குறித்து 'யாதுமானவள்' எனும் நிகழ்ச்சியை நடத்தினர்.
டாக்டர் ஜெயந்தாஸ்ரீ பேசினார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் ராசிகா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் விஜயகுமாரி, சண்முகராஜேஸ்வரன், கல்லுாரி முதல்வர் பெரியசாமி கலந்து கொண்டனர்.