/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு
ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு
ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு
ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு
ADDED : ஜன 07, 2024 04:18 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வுக்கு 2211 பேர் விண்ணப்பித்ததில் 1468 பேர் தேர்வு எழுதினர்.
அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. ராமநாதபுரத்தில் டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் தேர்வுகள் நடந்தது.
தேர்வு காலை, மாலை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. தேர்வு மையங்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும், போலீஸ் பாதுகாப்பு குறித்தும், தேர்வு எழுதும் மையங்களில் கண்காணிப்பு குழு மூலம் ஒளிப்பதிவு செய்யப்படுவதையும் கேட்டறிந்தார்.
இந்த தேர்வில் 2211 பேர் விண்ணப்பம் செய்ததில் 1468 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.743 பேர் தேர்வு எழுத வரவில்லை.