ADDED : ஜூன் 14, 2025 11:32 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உலக ரத்ததான நாள் விழா கடைபிடிக்கப்பட்டது. இதில் ரத்த தானம்செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூன் 14 ல் உலக ரத்த தான நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. ரத்தம் வழங்கும் தன்னார்வலர்களால் விலை மதிக்க முடியாதஉயிர்கள் காப்பற்றப்படுகின்றன.
ரத்த தான தினத்தை முன்னிட்டுராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்இ.எம்.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை மூலமாகதன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்கினர்.
ரத்ததானம் வழங்கியவர்களை தாய்பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமதுசான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.