/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
ADDED : செப் 18, 2025 10:56 PM

தொண்டி; அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
தொண்டி 13வது வார்டில் தர்கா கால்மாட்டு தெரு, சங்கம கோதா தெரு உள்ளிட்ட பல தெருக்கள் உள்ளன. 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட இந்த வார்டில் முறையான கால்வாய் இல்லை.
கழிவு நீர் ஆங்காங்கே தேங்கியிருந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல தடவை மனுக்கள் கொடுத்தும் பயனில்லாததால் நேற்று ஏராளமான பெண்கள் தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால் அலுவலகத்தில் செயல் அலுவலர் இல்லை. அங்கு பணி யாற்றும் சில அலுவலர்கள் மட்டும் இருந்தனர். ஆவேசமடைந்த பெண்கள் அலுவலகத்தை பூட்ட முயற்சி செய்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., முக்கிய பிர முகர்கள் தலையிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கூறி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து பெண்கள் கூறியதாவது:
ஐந்து ஆண்டுகளாக போராடி வருகிறோம். முறையான கால்வாய், ரோடு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குடிநீர் தட்டுப் பாடாகவும் உள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர்.