Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரயில் நிலையத்தில் குழந்தையுடன் மீட்கப்பட்ட  பெண்: ஆதார் மூலம் அடையாளம் காண நடவடிக்கை

ரயில் நிலையத்தில் குழந்தையுடன் மீட்கப்பட்ட  பெண்: ஆதார் மூலம் அடையாளம் காண நடவடிக்கை

ரயில் நிலையத்தில் குழந்தையுடன் மீட்கப்பட்ட  பெண்: ஆதார் மூலம் அடையாளம் காண நடவடிக்கை

ரயில் நிலையத்தில் குழந்தையுடன் மீட்கப்பட்ட  பெண்: ஆதார் மூலம் அடையாளம் காண நடவடிக்கை

ADDED : ஜூன் 21, 2025 11:23 PM


Google News
ராமநாதபுரம்: மண்டபம் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தையுடன் மீட்கப்பட்டமன நலம் பாதிக்கப்பட்ட வட மாநில பெண் குறித்து ஆதார் மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரத்தில் சுற்றுலா தலமான ராமேஸ்வரம் இருப்பதால் இங்கு வரும் வட மாநிலத்தவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை இங்குள்ள ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிடுகின்றனர்.

இது போன்றவர்களை குழந்தைகள் பாதுகாப்பு அலகு மீட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மண்டபம்ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தையுடன் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்சில நாட்களுக்கு முன் மீட்கப்பட்டார்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால்தனது முகவரியை ஜார்க்ண்ட் மாநிலம் என்று தெரிவித்தார்.

பின் அவரே உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர், என தெரிவித்தார். சமூக நலத்துறையினரிடம் இந்த பெண், குழந்தை ஒப்படைக்கப்பட்டனர்.

குழந்தை மதுரை மானகிரி பகுதியில் உள்ள தத்து வள மையத்தில்ஒப்படைக்கப்பட்டது. இளம் பெண் ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவரது முகவரியை தார் மூலம் கண்டறிய சமூக நலத்துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான சான்று பெற்று அதன் மூலம் உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று இந்த பெண்ணின் ஆதார் மூலம் முகவரியை கண்டு இவரை இவரது உறவினர்களிடம் ஒப்படைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us