/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முதுகுளத்துாரில் தரிசு நிலத்தையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் முதுகுளத்துாரில் தரிசு நிலத்தையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
முதுகுளத்துாரில் தரிசு நிலத்தையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
முதுகுளத்துாரில் தரிசு நிலத்தையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
முதுகுளத்துாரில் தரிசு நிலத்தையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
ADDED : ஜூலை 02, 2025 11:34 PM
முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே கீரனுார் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகள் தரிசு நிலங்களை பள்ளமாக்கி அட்டூழியம் செய்கின்றன.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட சிறுதானி பயிர்கள் விவசாயம் செய்தனர்.
தற்போது ஓரளவு விவசாயப் பணிகள் முடிந்ததால் ஏராளமான கிராமங்களில் தரிசு நிலங்களாகவே உள்ளது.
முதுகுளத்துார் அருகே கீரனுார் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் தரிசு நிலங்களை குழிதோண்டி பள்ளமாக்கி அட்டூழியம் செய்கின்றன.
அது மட்டும் இல்லாமல் காட்டுப்பன்றிகள் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
இதே நிலைமை தொடர்ந்தால் பருவமழை காலத்தில் நெற்பயிர்களை ஆரம்ப காலத்தில் காட்டுப்பன்றிகள் சேதபடுத்தும் நிலை உள்ளது.
எனவே காட்டுப்பன்றிகளை சுடலாம் என்ற அரசு உத்தரவை வரும் காலங்களில் விரைவில் முதுகுளத்துார், கமுதி பகுதியில் அமல்படுத்தி காட்டுப்பன்றிகள் தொல்லையிலிருந்து கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.