Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரத்தை போக்குவரத்துக்கழக மண்டலமாக அறிவிப்பது எப்போது

ராமநாதபுரத்தை போக்குவரத்துக்கழக மண்டலமாக அறிவிப்பது எப்போது

ராமநாதபுரத்தை போக்குவரத்துக்கழக மண்டலமாக அறிவிப்பது எப்போது

ராமநாதபுரத்தை போக்குவரத்துக்கழக மண்டலமாக அறிவிப்பது எப்போது

ADDED : ஜூன் 19, 2025 11:44 PM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டதலைநகரமாக இருப்பதால்மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளைகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் இணைந்து காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழக மண்டலமாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்துார்,பரமக்குடி, ராமநாதபுரம் நகர், புறநகர் கிளை என 6 கிளைகள் உள்ளன.

ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி சேதுக்கரை, காரங்காடு, பறவைகள் சரணாலயங்கள் சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டமாக உள்ளது. புதிதாக தொண்டி, சாயல்குடி பகுதிகளில் கிளைகள்அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கிளைகள் செயல்பட அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் 8 கிளைகளில் 450 க்கும் மேற்பட்ட பஸ்கள் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கரூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் 4 கிளைகள் இருக்கும் நிலையில் தனி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரத்தை புதிய மண்டலமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

அப்போது தான் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து மண்டலத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us