Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ l ராமநாதபுரம் நகராட்சியில் இதைவிட முக்கியமானதுஎன்னதான் வேலையோ..

l ராமநாதபுரம் நகராட்சியில் இதைவிட முக்கியமானதுஎன்னதான் வேலையோ..

l ராமநாதபுரம் நகராட்சியில் இதைவிட முக்கியமானதுஎன்னதான் வேலையோ..

l ராமநாதபுரம் நகராட்சியில் இதைவிட முக்கியமானதுஎன்னதான் வேலையோ..

ADDED : ஜூன் 18, 2024 05:13 AM


Google News
ராமநாதபுரம் நகராட்சியில் மதுரை ரோடு, சாலை தெரு, அரண்மனை ரோடு இவை தான் முக்கிய ரோடுகள், பஜாராக உள்ளது. இது தவிர வண்டிக்கார தெரு, அக்ரஹாரம் தெருக்களும் உள்ளன. மொத்தத்தில் முக்கிய தெருக்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இந்த தெருக்கள் எல்லாம் இரவில் இருளில் மூழ்கி கிடக்கிறது.

ராமநாதபுரம் நகரில் பெரும்பாலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அதிகபட்சம் இரவு 9:30 மணிக்குள் அடைத்து விடுகின்றனர். அதன் பிறகு கடைகளின் மின் விளக்குகள் அணைக்கப்படுவதால் ரோடுகள் இருளில் மூழ்குகிறது.

பிரபல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள சாலைத்தெரு, மதுரை ரோட்டில் நகராட்சி சார்பில் அதிக ஒளி தரும் மின் விளக்குகள் எதுவும் இதுவரை அமைக்கப்படாததால் ரோடுகள் இருளில் மூழ்குகிறது. மக்கள் இரவு 10:00 மணிக்கு மேல் இந்த ரோடுகளில் திக்.. திக்... பயணம் தான் செய்ய வேண்டும்.

வாகன ஓட்டிகளும் இருளில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மதுரை ரோட்டில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் விளக்குகளும்நகர் பகுதியில் சில இடங்களில் மட்டுமே மிகக் குறைவாக உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை எரிவதே இல்லை.

குறிப்பாக மதுரை ரோட்டில் ராமநாதபுரம் கலெக்டர் முகாம் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பகுதி கூட இருளில் தான் உள்ளது. நகரின் சாலைகள், தெருக்களை மின்விளக்குகளால் ஜொலிக்க வைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் இருளில் மூழ்காமல் தடுக்கலாமே.

இதனை பார்க்கும் மக்கள், இருப்பதோ இரண்டே ரோடு.. இதை கூட பராமரித்து மின் விளக்கு வசதிகள் செய்யாமல் நகராட்சி நிர்வாகம் என்ன தான் செய்கிறதோ. இதை விட இவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் என்ன தான் இருக்கிறதோ என வேதனை தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us