/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/திருப்புல்லாணியில் பஸ் ஸ்டாண்ட் ஊராட்சி தீர்மானம் என்னாச்சுதிருப்புல்லாணியில் பஸ் ஸ்டாண்ட் ஊராட்சி தீர்மானம் என்னாச்சு
திருப்புல்லாணியில் பஸ் ஸ்டாண்ட் ஊராட்சி தீர்மானம் என்னாச்சு
திருப்புல்லாணியில் பஸ் ஸ்டாண்ட் ஊராட்சி தீர்மானம் என்னாச்சு
திருப்புல்லாணியில் பஸ் ஸ்டாண்ட் ஊராட்சி தீர்மானம் என்னாச்சு
ADDED : ஜன 11, 2024 04:14 AM

திருப்புல்லாணி ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ.,ல் உள்ள திருப்புல்லாணியில் பஸ்ஸ்டாண்ட் அமைக்க ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது.
திருப்புல்லாணியில் இருந்து 5 கி.மீ.,ல் கடற்கரை புனித ஸ்தலமான சேதுக்கரை அமைந்துள்ளது.
திருப்புல்லாணியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் துறை, தொடக்க கல்வி அலுவலகம், வங்கி, அரசு மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படுகிறது.
சுற்றுவட்டாரங்களில் 33 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் வந்து செல்லும் பகுதியாக திருப்புல்லாணி உள்ளது.
இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட திருப்புல்லாணிக்கு பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். திருப்புல்லாணி ம.தி.மு.க., நிர்வாகி ரத்தினகுமார் கூறியதாவது:
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கும், சேதுகரைக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
ரெகுநாதபுரம், சேதுக்கரை, கீழக்கரை, ஏர்வாடி, உத்தரகோசமங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக திருப்புல்லாணி விளங்குகிறது.
பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. பஸ் ஸ்டாண்ட் அமைந்தால் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மக்களுக்கு கிடைக்கப்பெறும்.
திருப்புல்லாணி ஊராட்சி கிராம சபை கூட்டம் மற்றும் ஒன்றியக் குழு கூட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி திருப்புல்லாணியில் கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.