ADDED : ஜூன் 04, 2025 12:49 AM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே சுமைதாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ரோஜா பூ, பரிசுப் பொருட்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
சுமைதாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகள் உள்ளன. வகுப்பில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கி அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து பெற்றோரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் முனீஸ்வரி, ஆசிரியர் நிர்மலா தேவி ஆகியோர் செய்தனர். மாணவர்களுக்கு கிரீடம் மற்றும் மலர் மாலைகள் சூடப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.