/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புரட்டாசியில் களைகட்டும் பெருமாள் கோயில்கள் புரட்டாசியில் களைகட்டும் பெருமாள் கோயில்கள்
புரட்டாசியில் களைகட்டும் பெருமாள் கோயில்கள்
புரட்டாசியில் களைகட்டும் பெருமாள் கோயில்கள்
புரட்டாசியில் களைகட்டும் பெருமாள் கோயில்கள்
ADDED : செப் 18, 2025 04:35 AM
திருவாடானை : புரட்டாசி பிறந்ததால் திருவாடானை, தொண்டி பகுதி பெருமாள் கோயில்கள் களை கட்டத் துவங்கியுள்ளது.புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது.
பண்டிகைகள் நிறைந்த புரட்டாசியில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொண்டியில் உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடியில் லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி, குளத்துார் உள்ளிட்ட பல கிராமங்களில் பெருமாள் கோயில்கள் உள்ளன. நேற்று புரட்டாசி பிறந்ததால் இக்கோயில்கள் களை கட்டத் துவங்கியுள்ளது. பட்டாச்சாரியார்கள் கூறியதாவது:
புண்ணியம் மிக்க புரட்டாசியில் விரதங்கள் இருந்தால் அதிக புண்ணியம் கிடைக்கும். புரட்டாசி வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரியும் புரட்டாசிக்கு பெருமை சேர்க்கிறது. சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதனும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும்.
விரதமிருந்து வழிபாடு செய்தால் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும். அன்னை மகாலட்சுமி அருளால் நம் வீட்டில் செல்வ வளம் பெருகும். பெருமாள் கோயில்களில் தினமும் காலை 7:00 மணிக்கு நித்ய பூஜை நடைபெறும்.
சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் சிறப்பு அபிேஷகம், பூஜை நடைபெறும் என்றனர்.