/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழக்கரை நகரில் பொது மக்கள் பயன்பாட்டில் இருந்த 53 கிணற்றை காணோம்; : ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி குறைந்து வருகிறது கீழக்கரை நகரில் பொது மக்கள் பயன்பாட்டில் இருந்த 53 கிணற்றை காணோம்; : ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி குறைந்து வருகிறது
கீழக்கரை நகரில் பொது மக்கள் பயன்பாட்டில் இருந்த 53 கிணற்றை காணோம்; : ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி குறைந்து வருகிறது
கீழக்கரை நகரில் பொது மக்கள் பயன்பாட்டில் இருந்த 53 கிணற்றை காணோம்; : ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி குறைந்து வருகிறது
கீழக்கரை நகரில் பொது மக்கள் பயன்பாட்டில் இருந்த 53 கிணற்றை காணோம்; : ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி குறைந்து வருகிறது
ADDED : செப் 22, 2025 03:11 AM

கீழக்கரை கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 1998ம் ஆண்டில் இருந்த அரசுக்கு சொந்தமான 95 கிணறுகளில் தற்போது களப்பணியாளர்களின் அறிக்கையின்படி 42 கிணறுகள் மட்டுமே உள்ளன. 53 கிணறுகளை காணவில்லை. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி நாளுக்குநாள் பொதுகிணறுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
கீழக்கரை பேரூராட்சியில் இருந்து 2004 ஆக., 24ல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அத்தியாவசிய தேவைக்கும் இருந்து வந்தன. தற்போது நகராட்சிக்கு சொந்தமான பொதுக் கிணறுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1998ம் ஆண்டு அரசின் தரவின்படி மக்கள் பயன்பாட்டிற்கான 95 கிணறுகள் இருந்துள்ளன.
பின் 2007ம் ஆண்டு நகராட்சி அலுவலர்களின் கணக்கெடுப்பின்படி 42 கிணறுகளாக குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பால் 53 கிணறுகள் காணவில்லை. தொடர் பராமரிப்பு இல்லாமல் மேலும் கிணறுகள் குறைய வாய்ப்புள்ளது. ஒரு திரைப்படத்தில் வடிவேலு கிணற்றை காணவில்லை எனக்கூறுவார். அதே போன்ற நிலை தற்போது கீழக்கரையில் ஏற்பட்டுள்ளது. கிணற்றை நம்பி இருந்த ஏழை எளிய மக்கள் தண்ணீர் தேவைக்காக பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
கிணறுகளின் மூலமாக மழைநீர் நிலத்தடிக்கு ஊடுருவி நீர்நிலை மேம்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகித்தது. எனவே பொதுமக்களுக்கு பயன்பாட்டில் கிணறுகள் உள்ளதா அல்லது தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதை நகராட்சி நிர்வாகம் கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
--