/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு
கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு
கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு
கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : மார் 19, 2025 04:45 AM
ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரையோர கிராமங்களில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால் மீனவர் கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை பகுதியான திருப்பாலைக்குடி, பழங்கோட்டை, சம்பை, மோர்ப்பண்ணை, கடலுார், உப்பூர், சித்துார் வாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உப்பு தன்மையுடன் உள்ளது. இதனால் குடிநீருக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தையே முழுமையாக நம்பியிருக்கும் நிலை உள்ளது. சில வாரங்களாக காவிரி கூட்டு குடிநீர் உள்ளிட்ட குடிநீர் திட்டங்களிலும் முழுமையாக குடிநீர் சப்ளை இல்லாததால் கடற்கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமத்தினர் டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடற்கரை கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.