/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சக்கரக்கோட்டையில் குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர் சக்கரக்கோட்டையில் குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்
சக்கரக்கோட்டையில் குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்
சக்கரக்கோட்டையில் குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்
சக்கரக்கோட்டையில் குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்
ADDED : மே 10, 2025 07:08 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை ஊராட்சி வ.உ.சி., தெரு ரோட்டில் கீழக்கரை செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வீணாகியுள்ளது. உடனடியாக சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் நகர், அதனை சுற்றியுள்ள பட்டணம்காத்தான், சூரன்கோட்டை, சக்கரகோட்டை ஊராட்சிகளுக்கு குழாய் வழியாக காவிரி குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இக்குழாய் சரிவர பராமரிக்கப்படாமல் சேமடைந்து குடிநீர் வீணாவது வாடிக்கையாகியுள்ளது.
தற்சமயம் சக்கரகோட்டை ஊராட்சியில் வ.உ.சி.,நகர் 7 வது தெரு ரோட்டில் கீழக்கரை வரை செல்லும் குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து சக்கரகோட்டை ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் அரியநாயகம் கூறுகையில், வ.உ.சி., நகர் 7 வது தெருவில் குழாய் உடைந்து குடிநீர் குளம் போல குடியிருப்புகள் அருகே இடத்தில் தேங்கியுள்ளது.
இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கோடை காலத்தில் குடிநீரின் அவசியத்தை கருத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என்றார்.